ஆலிம் பட்டம்

மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்கு சேவை செய்வதே. ‘சேவை’ என்று தெரியாமலே அவரவரும் தமது குடும்பத்துக்காக சேவை செய்கிறோம். அதோடு நமக்கு சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு , ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ தேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவையை செய்ய வேண்டும் என்கிறேன். நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்தரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை – இத்யாதி இருக்கின்றன. நம் சொந்த கஷ்டத்துக்கு நடுவே சமூக சேவை வேறா என்று கேட்க கூடாது. உலகத்திற்கு சேவை செய்வதாலேயே சொந்த கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும்.

Author: admin_kashifulhuda

Share This Post On