சேவைகள்

நமது மத்ரஸாவில்…

நமது மத்ரஸாவில் தமிழ், உர்து இரு மொழிகளிலும் கல்வி போதிக்கப்படுகின்றது. தமிழில் முதலாவது ஜும்ரா முதல் ஏழாவது தஹ்ஸீல் வகுப்பு வரையிலும் உர்துவில் ஜமாஅத்தே ஃபார்ஸி முதல் ஜமாஅத்தே ஹஃப்தும் (தஹ்ஸீல் வகுப்பு) வரையிலும் நடைபெறுகின்றன.

அல்லாஹ்வின் கிருபையால் நமது மத்ரஸாவின் கண்காணிப்பில் தமிழகம் முழுவதும் 23 மத்ரஸாக்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மதரஸாக்களில் சுமார் 700 க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்னும் சில மதரஸாக்களின் முழு ஆண்டுத் தேர்வுகள் நமது மத்ரஸாவின் ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.

  • தன்ஜீமே அப்னாயே கதீம்

தவறான அசத்திய கொள்கைகள் தலைதூக்குவதை முறியடிப்பதற்காக நமது மத்ரஸாவில் பட்டம் பெற்ற ஆலிம்களைக் கொண்ட “தன்ஜீமே அப்னாயே கதீம்” முன்னாள் மாணவர் களின் கூட்டமைப்பு செயல்பட்டு வருகின்றது.

  • ஷரீஅத் தீர்ப்பாயம்

மேலும் இஸ்லாமிய சமுதாயத்தின் நலன் கருதி முஸ்லிம்கள் தங்களுக்கிடையேயுள்ள பிரச்சனைகளில் சிரமம், அலைக்கழிப்பின்றி மார்க்கத் தீர்ப்பை பெறவேண்டும் என்ற நன்னோக்கில் அகில இந்திய “இமாரத்தே ஷரயிய்யா”-வின் கீழ் நமது மத்ரஸாவில் மஹ்கமயே ஷரயிய்யா (ஷரீஅத் தீர்ப்பாயம்) ஆரம்பிக்கப்பட்டு வாரந்தோறும் ஞாயிறு மாலை நடைபெற்று வருகிறது.

நமது முஸ்லிம் சமூகத்தில் ஏற்படும் திருமண உறவு, சொத்து – பாகப்பிரிவினை உள்ளிட்ட பல முக்கிய பிரச்சனைகள் அல்லாஹ்வின் கிருபையால் நமது ஷரீஅத் தீர்ப்பாயத்தின் மூலம் சுமூகமான முறையில் தீர்க்கப்பட்டு வருகிறது.

  • குர்ஆன் ஆரம்பப் பாடசாலைகள்

நமது மத்ரஸாவிற்கு அருகிலுள்ள 15 இடங்களில் நமது மத்ரஸாவின் மேற் பார்வையில் குர்ஆன் ஆரம்பப் பாடசாலைகள் (மக்தப்கள்) நடத்தப்படுகின்றன.

  • செயல்பாடுகள்

மஜ்லிஸு தஹஃப்புளி கத்மிந் நுபுவ்வத் (இறுதி நபித்துவ பாதுகாப்புப் பேரவை), மஜ்லிஸு தஹஃப்புளிஷ் ஷரீஅத் (ஷரீஅத் பாதுகாப்புப் பேரவை), ஹைஅதுஷ் ஷரீஅத் (ஷரீஅத் பேரவை) ஆகிய அமைப்புகளுக்கு நமது மத்ரஸா முழுமையாக ஆக்கமும் ஊக்கமும் அளித்து செயலாற்றி வருகிறது.

வாரந்தோறும் வியாழன் மாலை மத்ரஸாவிலிருந்து ஆசிரியர்களின் கண்காணிப்புடன் சென்னையின் சுற்றுப்புறங்களுக்கு மாணவர்களின் தப்லீக் ஜமாஅத் செல்கிறது. மேலும் விடுமுறையில் 10, 40 நாட்கள் மாணவர்கள் ஜமாஅத்தில் செல்கின்றனர்.

மேலும் ஷரீஅத் பாதுகாப்புப் பேரவை சார்பில் சமுதாயத்திற்கு அவசியமான பலதரப்பட்ட முக்கிய தலைப்புகளில் இதுவரை 23 நூல்கள் நமது மத்ரஸாவின் ஆசிரியர்களால் தொகுத்து வெளிவந்துள்ளன.

சொற்பயிற்சி மன்றங்கள்

மாணவர்களின் சொற்பயிற்சி திறனை வளர்க்கும் முகமாக வாரந்தோறும் வெள்ளி இரவு அரபியில் அல்லஜ்னத்துல் அரபிய்யா, தமிழில் ஜம்யிய்யத்துல் ஹுதா, உர்தூவில் நத்வதுல் ஹுதா சொற்பயிற்சி மன்றங்கள் நடைபெறுகின்றன. மாணவர்கள் அதில் கலந்து தங்களின் பேச்சாற்றலை வளர்த்து வருகின்றனர். அசத்திய கொள்கைகளை எதிர் கொள்ளும் ஆற்றலை ஏற்படுத்த பல தலைப்புகளில் கருத்தரங்குகள் மாணவர்களால் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் எழுத்துத் திறனை வளர்ப்பதற்காக தமிழில் அல்-ஹுதா, அல்-இம்தாத், அஷ்ஷைய்க் அஹ்மது, உர்தூவில் அல்-ஹாதி, அல்-அஷ்ரஃப், அரபியில் அல்-காஸிம், அர்-ரஷீத் ஆகிய சுவற்று மலர்கள் மற்றும் அரபி, தமிழ், உர்தூ கையெழுத்துப் பிரதிகளும் மாணவர்களால் வெளியிடப்படுகின்றன.

சமுதாய சீர்திருத்தம் மற்றும் சத்திய இஸ்லாத்தை மக்கள் மன்றத்தில் எடுத்தியம்பும் நோக்கில் நமது மத்ரஸாவின் சார்பில் வெளிவரும் “மனாருல் ஹுதா” இஸ்லாமிய பல்கலை மாத இதழ் தமிழ் கூறும் நல்லுலகில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதுடன் சமுதாயத்தில் பல நல்ல தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

Author: admin_kashifulhuda

Share This Post On