






எங்களை பற்றி
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அல்லாஹ்வின் பெரும் கிருபையால் நமது மத்ரஸா காஷிஃபுல் ஹுதா மௌலானா அப்துல் மஜீத் பாக்கவீ ஹள்ரத் தாமத் பரகாதுஹும் (அமீரே ஷரீஅத் தமிழ்நாடு) அவர்களால் ஹிஜ்ரீ 1394 (கி.பி 1974-அம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறீய அளவில் ஒரு ஆசிரியர் இரண்டு மாணவர்களைக் கொண்டு திருப்பத்தூரில் மௌலானா முஹம்மது யஃகூப் காஸிமீ விஷாரமீ (ரஹ்) அவர்களின் துஆவுடன் ஆரம்பிக்கப்பட்டு பிறகு பல இடங்களுக்கு ஹிஜ்ரத் செய்து கடைசியாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மிகச் சிறப்புடன் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்! தற்போது 20 ஆசிரியர்கள் மற்றும் 300 மாணவர்களுடன் சிறப்பாக நடந்து வருகிறது. மாணவர்களுக்கு கல்வி, உணவு உறைவிடம் அனைத்தும் சிறப்பாக வழங்கப்படுகிறது. மேலும் இங்கு ஸில்ஸிலா நிஜாமிய்யா பாடத்திட்டத்தின் கீழ் கல்வி அமைப்பு செயல்பட்டு வருகிறது. அல்லாஹ்வின் கிருபையால் நமது மத்ரஸாவில் தமிழ், உர்தூ ஆகிய இரு மொழிகளிலும் முதல் ஜும்ரா முதல் ஏழாம் ஜும்ரா வரை கல்வி பயிற்றுவிக்கப்படுறது.
மேலும் ஹிஃப்ளு பிரிவும் செயல்பட்டு வருகிறது.
